Map Graph

குதுப் சாகி கல்லறைகள்

குதுப் சாகி கல்லறைகள் இந்தியாவில், ஐதராபாத் நகரில் கோல்கொண்டா கோட்டைக்கு அருகில் உள்ள இப்ராகிம் பாக் எனுமிடத்தில் அமைந்துள்ள கல்லறைகள் ஆகும். இவ்விடத்தில் குதுப் சாகி வம்சத்தில் வந்த பல்வேறு அரசர்களின் கல்லறைகளும் மசூதிகளும் அமைந்துள்ளன. சிறிய கல்லறைகள் ஒரு தளத்தையும், பெரிய கல்லறைகள் இரண்டு தளங்களையும் கொண்டுள்ளன. ஒவ்வொரு கல்லறையின் நடுவிலும் ஒரு சுடுமண் ஈமப்பேழை உள்ளது, இது கீழே உள்ள புதைகுழியில் ஈமப்பேழைக்காக விடப்பட்ட இடத்தை நிரப்பி விடும். இந்த மாடங்கள் நீலம் மற்றும் பச்சை நிற பளிங்கு கற்களால் அழகுபடுத்தப்பட்டன. அவற்றின் ஒரு சில துண்டுகள் மட்டுமே இப்பொழுது காணப்படுகின்றன.

Read article
படிமம்:Qutb_Shahi_Tomb_5.jpgபடிமம்:Golconda_Tombs_from_Fort,_1902-03.jpg